தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள், ரசிகர்கள் வரவேற்பை பெறுவதோடு, மனதை விட்டு நீங்காத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், என்றென்றும் ரசிகர்கள் உணர்வோடு கலந்த திரைப்படம் என்றால் அது 'ஆட்டோகிராப்'.

இயக்குனர் சேரன், காதல் அனுபவங்களை மிகவும் நேர்த்தியாக கூறியிருந்த படம் ஆட்டோகிராப். பல்வேறு விருதுகளை பெற்று, சேரனை ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் ரசிகர்கள் மனதில் நிலைக்க செய்தது.

இந்நிலையில், ஒரு பேட்டி இயக்குனர் சேரன் 'ஆட்டோகிராப்' படத்திற்காக பல முன்னணி நடிகர்களிடம் கதையை கூறியதாகவும், ஒரு சில காரணத்தால் அவர்களால் நடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பிரபுதேவா இந்த படத்தில் கமிட் ஆகி, பின் சம்பள பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறியுள்ளார். அதே போல் விக்ரமிடம் இந்த கதையை கூறியபோது, 'ஜெமினி' படம் அவருக்கு வெற்றி படமாக அமைத்ததால், காதல் கதையில் நடிக்க விருப்பம் இல்லை என்பது போல் தெரிவித்து இந்த கதையை நிராகரித்தாராம்.

எனவே ஒரு நிலையில் தானே கதாநாயகனாக நடிக்கும் முடிவை எடுத்துள்ளார் சேரன். இந்த படத்தில் நடித்தபோது அவர் பெரிய நடிகராக இல்லா விட்டாலும், இவர் நடிப்பு பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டு படமும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.