ஒன்றிரண்டு கெட் அப்களில் நடிக்கும் படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வரும் நிலையில், அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் 25 கெட் அப்களில் நடித்து மாபெரும் ரிஸ்க் எடுக்கவிருக்கிறாராம் நடிகர் விக்ரம்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து,அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ நிறுவனம் தயாரிக்கிறது.இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. பிரம்மாண்ட ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கான கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க  மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறதாம்.’விக்ரம் 58’ என்றழைக்கப்படும்  இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் இந்தப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்தப்படத்தின் இன்னொரு சிறப்பு, நாயகன் விக்ரம் 25 கெட்டப்களில் நடிக்கவிருக்கிறாராம்.ஒவ்வொரு தோற்றத்திற்கும் பெரிய வித்தியாசம் காட்டவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடந்துவருகிறதாம்.விக்ரம் இதற்கு முன் ’ராஜபாட்டை’ படத்தில் 7 கெட்டப்களில் நடித்திருந்தார். சுசீந்திரன் இயக்கிய அந்தப்படம் மாபெரும் தோல்வி அடைந்தது. ஷங்கரின் ‘ஐ’படத்துக்குப் பிறகு ‘பத்து எண்றதுக்குள்ள’,’இருமுகன்’,’சாமி 2’ இறுதியாக கடந்த வாரம் வெளிவந்த ‘கடாரம் கொண்டான்’வரை விக்ரம் நடித்த அத்தனை படங்களும் தோல்வியைத் தழுவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.