விஜய் சேதுபதி குணச்சித்திர நாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடைத்தவர், பின் சரியான கதை தேர்வுகள் மூலம் மிக சீக்கிரமாக ரசிகர்கள் மத்தியில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தன் யதார்த்தமான நடிப்பால் அசர வைக்கிறார்.
தற்போது இவர் நடித்து வரும் படங்களுக்கு 40 நாட்கள் மட்டும் தான் கால்ஷீட் கொடுக்கிறாராம். அதிகமான படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் படத்தில் ஹீரோவுக்கு மிகவும் பில்ட் அப் கொடுக்கும் காட்சிகளை இயக்குனரிடம் வேண்டாம் என வலியுறுத்தி தவிர்த்துவிடுகிறாராம்.
இப்போது கவண் படத்தில் ஐடி துறை ஊழியராக நடித்து வரும் விஜய்சேதுபதி வழக்கம் போல் நடிப்பை காட்டுகிறாராம். அதனாலேயே இயக்குனர் கே.வி.ஆனந்த் அவருக்கு பில்ட் அப் காட்சிகளை வைக்கவில்லையாம்.
