vijaysethupathy acting for seran direction
தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கதைகளை இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்தவர் இயக்குனர் சேரன்.
சமீப காலமாக குடும்ப பிரச்சனைகள் காரணமாக சற்று சினிமாவை விட்டு விலகி இருந்த சேரன் தற்போது மீண்டும் இயக்கத்தின் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் இயக்கிய படங்களில் இன்று முதல் மக்கள் மனதில் நீங்காமல் உள்ளவை பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் ஆகிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்ற ஒரு குடும்ப பாங்கான கதையில் விஜய்சேதுபதி நாயகனாக வைத்து இயக்க உள்ளாராம். ஏற்கனவே சமீபத்தில் வெளிவந்த 'தர்மதுரை' என்ற குடும்பப்பாங்கான படத்தில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் ஒரு இதே போன்ற தோரணையில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
