கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை. அதனால் நீண்ட நாட்களாக கதை விவாதத்தில் ஈடுபட்டு தரமான கதையை தயார் செய்துள்ளார்.  விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது நானும் ரெளடி தான் படம். சினிமா கெரியர் மட்டுமல்லாமல், லவ் லைப்பிலும் நயனை பிக்கப் செய்து நல்ல படியாக போய்கொண்டிருக்கிறது. 

அதனால் தான் காத்துவாக்குல இரண்டு காதல் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் விஜய் சேதுபதிவை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். முழுக்க காதல் கலந்த காமெடி திரைப்படமான இதில் இரண்டு கதாநாயகிகளாம். ஒன்று நயன்தாரா, மற்றொரு கதாபாத்திரத்தில் முக்கியமான நடிகை ஒருவர் நடித்தால் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று யோசித்த நயன், அவரே பிரபல முன்னணி நடிகையிடம் பேசி ஓகே வாங்கியதாக தகவல்கள் பரவின. 

இதுவரை படம் குறித்து எவ்வித தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில் காதலர் தினமான இன்று புல் ரொமான்ஸ் மூடுக்கு வந்த விக்னேஷ் சிவன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்தின் டைட்டில் லுக்குடன் வெளியாகியுள்ள வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லைகா நிறுவனத்திடம் விக்னேஷ் சிவன், கதை சொல்லும், போது பட்ஜெட் ஓவராக உள்ளது என்று, நோ சொல்லி விட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், தற்போது செவன் ஸ்க்ரீன் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம். இந்த அறிவிப்பை பார்த்த பலரும் விஜய்சேதுபதிக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என புலம்பி வருகின்றனர்.