அப்பன் தோத்த ஊருல புள்ளைங்க ஜெயிக்கிறது சாதாரன விஷயம் இல்லை.. என்னும் மாஸ் டைலாக்குடன் வெளியாகியுள்ளது விஜய் சேதுபதியின் மாமனிதன் ட்ரைலர்.
4 வது முறையாக இணைந்த கூட்டணி :
விஜய் சேதுபதி தனது அறிமுக படமான தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி 4-வது முறையாக இணைந்துள்ள படம் தான் மாமனிதன். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவுஇருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர்.
பல ஆண்டு காத்திருப்பு :
2019-ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து விட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக 3 ஆண்டுகளாக மாமனிதன் ரிலீசாகாமல் காத்திருப்பில் உள்ளது.. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் அறிவித்தனர். அதன்படி வருகிற மே மாதம் 6-ந் தேதி மாமனிதன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மீண்டு பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு மே 20 -ம் தேதி படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...பாக்ஸ் ஆஃபீஸ் மான்ஸ்டரான கே.ஜி.எஃப்..4 நாட்களில் வசூலை வாரிக்குவித்து சாதனை..
பட ரிலீஸ் தள்ளிப்போக காரணம் :
மீண்டும் இந்த படம் தள்ளிப்போக விஜயின் மற்றோரு படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் தான் காரணம் என சொல்லபப்டுகிறது. இந்த படம் ஏப்ரல் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதற்கு அடுத்த வாரமே மாமனிதன் ரிலீசானால் வசூல் பாதிக்கும் என்பதால் மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாம்.
மாமனிதன் ட்ரைலர் :
இந்நிலையில் இந்த படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது. இரு பிள்ளைகளுடன் அன்பான குடும்பத்தை நடத்தி வரும் ஆட்டோ ஓட்டுநர் விஜய் சேதுபதி பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக என கூறி பணம் சேர்க்க தவறான வழியை தேர்ந்தெடுக்கிறார். இதனால் எதிர்களிடமும், பொலிஸிடமும் மாட்டிக்கொள்கிறார். பின்னர் இவர்களிடமிருந்து தப்பிக்க தன குடும்பத்தை விட்டுவிட்டு கேரளா, காசி என திரியும் விஜய்சேதுபதி இல்லிகள் தொழில் ஈடுபடுபவராக காட்டப்பட்டுள்ளார்.

