பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வெறும் 70 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவாராம். மீதி கதை அவருடைய மனைவியான ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றியே நகரும் என்று கூறப்பட்டது.

 

 

கடந்த 17ம் தேதி இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. “புன்னகயே புயலாய் மாறும்” என தொடங்கும் இந்த பாடலை சுந்தரைய்யர் பாடியுள்ளார்.  இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் நிச்சயம் பெண்களை வெகுவாக கவர்ந்தது. வரிகளை பார்க்கும் போது காணாமல் போன கணவனை தேடி அலையும் அல்லது தேட ஆயத்தமாகும் ஒரு அபலை பெண்ணின் குரல் போல் தெரிவதாக ரசிகர்கள் கருத்து கூறினர். இந்நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் க/பெ ரணசிங்கம் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது. 

 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. முதலில் இதை தயாரிப்பு நிறுவனம் மறுத்து வந்த போதும் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. க/பெ ரணசிங்கம் திரைப்படம் வரும் 2ம் தேதி ஓடிடி-யில் ரிலீஸாக உள்ளது. ஜீ பிளக்ஸ் என்பது கட்டண முறையில் படம் பார்ப்பதற்காக ஜீ குழுமம் உருவாக்கியுள்ள நிறுவனம். ஓடிடி-யில் ஓராண்டு சந்தா செலுத்திவிட்டால் அதில் வெளியாகும் அனைத்து படங்களையும் இலவசமாக பார்க்கலாம். ஆனால் ஜீ பிளக்ஸ் தளத்தில் ஒரு படத்தை ஒரு முறை பார்க்க குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அந்த முறையில் முதல் தமிழ் படமாக க/பெ ரணசிங்கம் வெளியாக உள்ளது. 

 

இதையும் படிங்க: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகரின் மகனும் பங்கேற்கிறாரா?... கமலின் ஸ்பெஷல் பரிந்துரையாம்...!

இந்த படத்தை ஒரு முறை நீங்கள் ஜீ பிளக்ஸில் பார்க்க 199 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். சில தியேட்டர்களில் கூட அதிகபட்சம் ரூ.190 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் போது, ஜீ பிளக்ஸில் அதை விட 9 ரூபாய் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.