இந்நிலையில் லாபம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

2015-ம் ஆண்டு புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கொரோனா பிரச்சனைகளுக்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தர்மரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி பங்கேற்றிருப்பதை கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் அவரை காண தினமும் குவிந்து வந்தனர். இதனால் போலீசாரை பாதுகாப்பிற்கு அழைக்கும் நிலைக்கும் படக்குழு தள்ளப்பட்டது. இதனிடையே கடந்த வாரத்துடன் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை விஜய் சேதுபதி நடித்து கொடுத்துவிட்டார். 

இந்நிலையில் லாபம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றாற் போல் விஜய் சேதுபதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் உடன் நெட் பிளிக்ஸ் பெயரையும் இணைத்து பதிவிட்டிருந்தார். இதனால் ஓடிடி ரிலீஸ் உறுதியானதாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் லாபம் திரைப்பட ரிலீஸ் குறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். 

Scroll to load tweet…

இதையும் படிங்க: களைகட்டும் பெரிய வீட்டு கல்யாணம்... அம்மாவின் நிச்சயதார்த்த புடவையில் வாரிசு நடிகை வெளியிட்ட போட்டோ...!

சமூக அரசியல் த்ரில்லர் படமாக லாபம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகாது என்றும், மிகப்பெரிய அளவில் தியேட்டரில் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் #LaabamOnTheatresSoon என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.