Vijays Mersal Budget Box Office Collection Prediction
விஜய் படம் என்றால் பிரச்சனை இல்லாமல் வெளியானால் பெரிய வெற்றிதான், தற்போது மெர்சல் படத்திற்கும் பல்வேறு பிரச்சனை வெடித்தது. தற்போது அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து ஒருவழியாக வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது.
வரி விலக்கு இருந்த போது அதிக விலைக்கு டிக்கட் விற்க கூடிய சூழலில்
தளபதி விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, தெறி ஆகிய படங்கள் மட்டுமே வசூலில் 45 கோடியை கடந்த படங்கள். அந்த படங்களின் பட்ஜெட், விஜய் வாங்கிய சம்பளம் குறைவு.

மிக பிரமாண்டமான முறையில் ஏராளமான பொருட்செலவில் உருவான மெர்சல் படத்தின் பட்ஜெட் 125 கோடிக்கு மேல் என்கிறது தயாரிப்பு தரப்பு. தமிழ் படங்களின் வியாபார எல்லைகள் விரிவடைந்தாலும் பிரதான வசூல் தளமாக இருக்கும் தமிழ்நாட்டில் வசூல் குறைவாக உள்ளது. திரைத்துறையினருக்கும் - தமிழக அரசுக்கும் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுக்கு இரு தரப்பும் வந்தனர். ஏற்கெனவே மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.
தமிழகம் முழுவதும்தனி திரையரங்குகளுக்கு குறைந்த பட்சம் 40 ரூபாய் அதிக பட்சம் 100 ரூபாய் எனவும் A/C அல்லாத தியேட்டர்களுக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் அதிக பட்சம் 8 ரூபாய் எனவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த டிக்கட் கட்டணத்தை விட அதிகமான விலைக்கு தியேட்டர்களில் டிக்கட் விற்பனை செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கையில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மெர்சல் படத்தை தயாரித்துள்ள தேணான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், படத்தை திரையிட உள்ள தியேட்டர்களுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரமுறையே மாற்றம் காண இருப்பதால் விஜய் படம் முதல் வாரத்தில் வசூலிக்கும் தொகை குறையும். தியேட்டர்களில் விஜய் படம் வெளியாகும் நாட்களில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சி, ஓபனிங் ஷோவுக்கான டிக்கட்டுகள் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படும்.

இதன் மூலம் முதல் மூன்று நாட்களிலேயே 45 கோடி முதல் 50 கோடி வரை மொத்த வசூல் தமிழ்நாட்டில் மட்டுமே கிடைக்கும். அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கட் விற்பனை என்கிற போது இது பாதியாக குறையும். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தமிழகத்தில் குறைந்த பட்சம் 150 கோடி வசூல் ஆனால் மட்டுமே GST, உள்ளாட்சி வரி, தியேட்டர் வாடகை, ஷேர் கழித்து சுமார் 60 கோடி நிகர வருவாயாக கிடைக்கும். தற்போதைய டிக்கட் கட்டணத்தில் இது சத்தியமாக சாத்தியமே இல்லை.

ஏற்கனவே, டைட்டிலே பிரச்சனை, புறா மூலம் ஆப்பு, பீட்டா வைத்த வெட்டு அப்புறம் திரையரங்க கேளிக்கை வரி பிரச்சனை இருந்து வந்தது. இதை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், நடிகர்சங்கம் முறையிட்டு கேளிக்கை வரியை ரத்து செய்த்து மெர்சல் படத்துக்கு ஆப்பு வைத்து விட்டார் முதல்வர் எடப்பாடி என ரசிகர்கள் பெரும் கோபத்தில் புலம்பி வருகின்றனர்.
