vijays birthday hash tag did a grate record

இன்று தளபதி விஜயின் 44வது பிறந்தநாள். விஜய் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான நாளான இன்றைய தினத்தை, அவர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஒரு நடிகராக மட்டுமின்றி நல்ல மனிதராக விஜயின் குணங்களை ரசிக்கின்றனர் அவரது ரசிகர்கள். அதற்கு தகுந்தாற் போல இருக்கின்றது அவரது நடவடிக்கைகளும்.

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தளபதி 62 படத்திற்கான பெயர் ”சர்கார்” நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சர்கார் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்கும் வெளியாகி, விஜய் ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி இருக்கிறது.

#HBDThalapathyVIJAY 817K Tweets Plus Counting💪💪💪 pic.twitter.com/O0egoGF4hZ

— Vijay Fans Trends (@VijayFansTrends) June 21, 2018

தளபதி விஜயின் பிறந்த தினமான இன்று அவருக்கு அவரது ரசிகர்கள், மற்றும் பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் போன்றோர், சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

#HBDThalapathyVIJAY 902K + Tweets 98K Tweets to go for 1M Tweets🔥🔥 pic.twitter.com/FFC6W423B7

— Vijay Fans Trends (@VijayFansTrends) June 21, 2018

அவரின் பிறந்தநாளை டிவிட்டரில் சிறப்பாக்கும் விதமாக உருவாக்கப்பட்ட #HBDThalapathyVIJAY ஸ்பெஷல் ஹேஷ் டேக், தற்போது ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. மிகப்பெரிய எண்ணிக்கையிலான ட்வீட் மற்றும் ரீட்வீட்டுகளை பெற்று இந்த டேக் சாதனை செய்து இருக்கிறது. இந்த ட்வீட்டுகளின் எண்ணிக்கை 1 மில்லியனை இப்போது நெருங்கி கொண்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.