திரையுலகிலும், மக்கள் மத்தியிலும் சிறந்த நடிகர், அரசியல்வாதி மற்றும் நல்ல மனிதர் என அறியப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த். தற்போது சற்று உடல் நலம் சரியில்லாததால் அரசியல் களத்தில் இறங்காமல் ஓய்வில் இருக்கிறார். ஆனால் அவருக்கு பதிலாக அவருடைய மனைவி பிரேமலதா தான் தற்போது அரசியல் கட்சியை முழுமையாக கவனித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

இவர்களுக்கு விஜய் பிரபாகர் மற்றும் ஷண்முகபாண்டியன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் பிஸினெஸ் மற்றும் விளையாட்டு துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டாவது மகன் சிறந்த கதைகளை தேர்வு செய்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்.

அந்த வகயில் இவருடைய நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'மதுரவீரன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'தமிழன் என்று சொல்லடா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷண்முகபாண்டியன் ஒரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக நின்றபடி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு... "அவருக்கு இனிய பிறந்த நான் வாழ்த்துக்கள் என்...." என கூறி அவருக்கும் அந்த பெண் என்ன உறவு என்பதை கூறாமல் ட்விஸ்ட் வைத்துள்ளார்.

தற்போது இவரின் இந்த பதிவு, வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் இவர் தான் உங்களுடைய வருங்கால மனைவியா என கேள்வி எழுப்பி வருகின்றனார்.

உண்மையில் இவர் தான் விஜயகாந்தின் மருமகளா..? ஷண்முகபாண்டியன் சொன்னால் தான் தெரியும்.