ஒரே ஒருநாளாவது தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு ஒரு சில வார்த்தைகளாவது விஜயகாந்தைப் பேச வைப்பதற்கு டாக்டர்கள் மூலம் பெரும் முயற்சி எடுத்துவருகிறாராம் பிரேமலதா.ஆனால் விரைவில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார் என்று பிரேமலதாவால் தொடர்ந்து கதை கட்டப்பட்டு வரும் விஜய்காந்த், தேர்தல் பிரச்சாரத்துக்கு வர ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்பதே உண்மை என்கிறது கேப்டனின் நலம் விரும்பிகள் வட்டாரம்.

டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் 100 சதவிகித ஓய்வு எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு, பிரபலங்களுடனான சந்திப்புக்கு என்று தொடர்ந்து சிரமப்படுத்தப்பட்டார் கேப்டன். தற்போது அ.தி.மு.க.வினரின் சட்டசபைத் தொகுதிகளுக்கு மட்டுமாவது அவர் தலையை மட்டும் காட்டினால் போதும் என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பு நச்சரித்துவரும் நிலையில் ‘இதோ வருவார், அதோ வருவார் என்று போக்குக் காட்டிவருகிறார் பிரேமலதா.

ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து கேப்டனுக்கு மிக நெருங்கிய வட்டாரங்களில் பேசியபோது, “ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் கேப்டனால் பழையபடி செயல்பட முடியவில்லை என்பதே உண்மை. கூட்டணிப் பேச்சுவார்த்தை, உடல் நலம் விசாரிப்பு என்று அவரை மையமாகவே வைத்து எல்லாம் நடந்தது. ஆனால் அது அவரது உடல்நலனை பின்னோக்கியே இழுத்துச் சென்றது. உண்மையில் விஜயகாந்தால் இப்போது ஒரு வார்த்தை கூட பேசவே முடியவில்லை. அதற்காகத்தான் தினமும் காலை மாலை இருவேளை பேச்சுப் பயிற்சி நடக்கிறது. ஒரு சில வார்த்தைகளாவது அவரைப் பேச வைத்து தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி கட்டத்தில் அவரை ஈடுபடுத்துவதற்கான அத்தனை முயற்சிகளும் நடக்கின்றன.

ஆனால் இந்த பயிற்சி கூட அ.தி.மு.க.வினர் மேடையில் விஜயகாந்த் தோன்றுவதற்கு அல்ல. சுதீஷ் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதியில் கேப்டன் ஒருசில நிமிடங்கள் தரிசனம் தந்து ஒரு சில வார்த்தைகளாவது பேசிவிட மாட்டாரா என்பதற்காகத்தானாம்.