சிவாஜி கணேசன் மறைவின் போது நடிகர் விஜயகாந்த் ஒற்றை ஆளாக இறங்கி கூட்டத்தை கட்டுப்படுத்திய மாஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜயகாந்த்துக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து சிறப்பாக வழிநடத்தியதோடு, சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது தொடங்கி சினிமாவுக்காக அவர் செய்த மகத்தான செயல்கள் ஏராளம். அதன்காரணமாகவே அவரது மறைவை அறிந்ததும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அலைகடலென திரண்டு வந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க விஜயகாந்தின் பழைய வீடியோக்களும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அந்த வகையில் சிவாஜி கணேசன் மரணத்தின் போது கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டத்தை அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் ஒற்றை ஆளாக அப்புறப்படுத்திய மாஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சிவாஜி கணேசனின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் விஜயகாந்த் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் சிவாஜியின் மரணத்தின்போது கட்டுக்கடங்காமல் வந்த கூட்டத்தை கட்டுப்படுத்தியது தொடங்கி இறுதி ஊர்வலம் வரை கூடவே இருந்து விஜயகாந்த் செய்த உதவிகளை பார்த்து கேப்டனின் இந்த தங்கமான மனசை ரசிகர்கள் பாராட்டி அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Scroll to load tweet…

சிலர் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணின் அறிமுக காட்சியை போல் இருப்பதாக விஜயகாந்தின் வீடியோவை ஒப்பிட்டு வருகின்றனர். போலீசால் முடியாததை கூட தனி ஆளாக செய்துகாட்டிய கேப்டன் விஜயகாந்தின் இந்த வீடியோ பார்த்து இதுதான் ரியல் மாஸ் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... விஜயகாந்துக்கு செய்வினை வைக்கப்பட்டதா? கேப்டனின் மரணத்தில் சந்தேகம்... பகீர் கிளப்பிய கங்கை அமரன்