நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்த வந்தபோது கேப்டனின் ரசிகர்கள் அவரை வெளிய போ என சொல்லி கோஷம் போட்டதால் பரபரப்பு நிலவியது.

கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை மரணமடைந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்திற்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் ரசிகர்களும் தொண்டர்களும், திரையுலகினரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.

விஜயகாந்த் உடல் நேற்று காலை அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் படையெடுத்து வந்து கேப்டனின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு நடிகர் விஜய்யும் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கனத்த இதயத்துடன் தேமுதிக அலுவலகம் வந்திருந்தார்.

அப்போது அங்கு விஜய் கூட்ட நெரிசலில் சிக்கினார். இதையடுத்து போலீசார் அவரை பத்திரமாக மீட்டு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த அழைத்து சென்றனர். விஜயகாந்த் உடலை பார்த்து நடிகர் விஜய் கலங்கி நின்ற காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. பின்னர் பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகன்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் விஜய்.

நடிகர் விஜய் கிளம்பும்போது அங்கிருந்த விஜயகாந்தின் ரசிகர்கள் வெளியே போ என விஜய்யை பார்த்து கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. நடிகர் விஜய்யை திரையுலகில் ஆரம்ப காலகட்டத்தில் தன் படத்தில் நடிக்க வைத்து பிரபலமாக்கியதே விஜயகாந்த் தான். அவர் உடல்நிலை குண்றி இருந்தபோது ஒருமுறை கூட அவரை விஜய் பாரக்க வராததன் அதிருப்தியால் தான் விஜயகாந்த் இவ்வாறு கோஷமிட்டதாக கூறப்படுகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் பெரிய சக்தியாக இருந்திருப்பார் - கலங்கிய ரஜினிகாந்த்