மகரிஷி படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மகேஷ்பாபு நடிப்பில் உருவாகிவரும் படம் 'சரிலேறு நீக்கெவரு'. உன்னுடன் சரிக்கு சரியாக மோதும் ஆள் யார் இருக்கா? என்பதுதான் இந்த டைட்டிலுக்கான அர்த்தம். 

அனில் ரவிபுடி இயக்கும் இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா மற்றும் அதிதி ராவ் என டபுள் ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப்படத்தின் ஹைலைட்டே முக்கிய கதாபாத்திரத்தில் 'லேடி சூப்பர்' ஸ்டார் விஜயசாந்தி நடிப்பதுதான். 

இந்தப் படத்தின் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர், திரையில் ஜொலிக்க உள்ளார். வரும் சங்கராந்திக்கு 'சரிலேறு நீக்கெவரு' ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விஜயசாந்தியின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. 

இயக்குநர் அனில் ரவிபுடி, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில், பாரதி என்ற கதாபாத்திரத்தில் விஜயசாந்தி நடிக்கிறார். அவரது அசத்தலான லுக்கில் அசந்தபோன ரசிகர்கள், சமூகவலைதளத்தில் படத்திற்காக சங்கராந்தி வரை காத்திருக்க முடியாது என  அன்பு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.