'போடா போடி' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தொடர்ந்து விஜய் சேதுபதி பாணியில், நாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் அசத்தி வருபவர் வரலட்சுமி.

இது நாள் வரை நடிகையாக மட்டுமே இருந்த இவர், தற்போது 'கண்ணாமூச்சி' என்கிற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.  இந்தத் திரைப்படத்தை, மெர்சல் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த நிலையில் நடிகையில் இருந்து இயக்குனராக புரமோஷன் பெற்றுள்ள வரலட்சுமிக்கு சுஹாசினி, ஹன்சிகா, சாயிஷா, ரம்யா, ரம்யா நம்பீசன், சமந்தா, லட்சுமி மஞ்சு, அபிராமி, சிம்ரன், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டாப்சி, தமன்னா, விஜயின் மனைவி சங்கீதா,ஜோதிகா உள்ளிட்ட 50 பெண் பிரபலங்கள் கை கோர்த்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோர் வாழ்த்துக்களுடன் துவங்கியுள்ள இவருடைய இயக்குனர் பயத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் மேலும் இவர்கள் இருவரும் 'கண்ணாமூச்சி' போஸ்டரை காட்டியபடி வெளியிட்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.

பொதுவாக விஜய் நடிக்கும் படங்கள் குறித்து கூட கருத்து சொல்லாத சங்கீதா விஜய், முதல் முறையாக நடிகை வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது கோலிவுட் திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.