vijay vasanth after treatment shared video

தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்கள், நடிப்பை கூட மிகவும் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்று கடினமாக உழைக்கிறார்கள். 

சிலர் ஸ்டன்ட் காட்சிகளில் கூட, டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் அடங்குவார்கள்.

நாடோடிகள், ஜிகினா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய் வசந்த், தற்போது திகில் படமான 'மை டியர் லிசா' என்கிற படத்தில் நடித்து வந்தார். ஊட்டியில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்ப்பாராத விதமாக இவரின் கால் ஒரு பள்ளத்தில் சிக்கிக்கி கால் முறிவு ஏற்பட்டது. 

உடனடியாக ஊட்டியின் அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் படக்குழுவினர் இவரை அனுமதித்து சிகிச்சையளிதத்னர். பின் இவரை சென்னை கொண்டுவந்தனர். 

தற்போது சென்னையில் கால் முறிவுக்கு சிகிச்சை பெற்று வரும் இவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் நலமுடன் உள்ளதாக கூறி ரசிகர்களுக்காக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…