தளபதி விஜய்யின் படங்களுக்கு எப்போது  எடுத்து முடித்து ரிலீஸின் போது தான் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக துவங்கும், ஆனால் தற்போது 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடிப்பதற்குள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் விஜய். 'மாஸ்டர்' படம் சம்மந்தமாக பிரச்சனைகள் வரவில்லை என்றாலும், தளபதியை நினைத்து அவருடைய ரசிகர்கள் சற்று வருத்தமாக தான் உள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்களை கவலையை போக்கும் விதத்தில், கடந்த வாரம் வெளியான 'குட்டி கதை' பாடல் தொடர்ந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

'மாஸ்டர்' படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து  வரும் நிலையில் தளபதி, படப்பிடிப்பு பணிகளில் செம்ம பிஸியாக இருக்கிறார்.

மேலும் தளபதி 'மாஸ்டர்' படத்திற்காக பிரத்தேயேக கார் ஒன்றை உபயோகித்து வருவதாக கூறப்படுகிறது. பார்ப்பதற்கு பழையகாலத்து பென்ஸ் கார் போல் உள்ளது. நீல நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு, அதில் வெள்ளை நிற கோடுகள் உள்ளது. இந்த காரின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

தளபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக நடிகை, மாளவிகா மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாகிவரும் காரின் புகைப்படம் இதோ: