vijay tv sunitha about the accident
அசாம் மாநிலத்தில் இருந்து வந்து, பிரபல தொலைக்காட்சியில் தொடர்ந்து மூன்று சீசனில் தன்னுடைய நடனத் திறமையை நிரூபித்தவர் சுனிதா. மேலும் நடிகர் தனுஷ் நடித்த '3' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்திருந்தார். அதேபோல் பல ஆல்பம் பாடல்களிலும் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக, சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. இந்த வீடியோ குறித்து தற்போது விஜய் டிவி பிரபலம் சுனிதா உண்மையில் நடந்து என்ன என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மது அருந்தவே மாட்டேன், எனக்கு கார் ஓட்டவும் தெரியாது. எப்போதும் எனது காரை ஓட்டுனர் தான் ஓட்டுவார், அதோடு அவர் குடித்திருக்கிறாரா என்பதை தெரிந்து கொண்டுதான் கார் ஓட்ட அனுமதிப்பேன்.
இந்த கார் விபத்து நடந்தபோது நான் என் காரின் பின்னால் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது ஓட்டுனர் செய்தது தவறுதான், ஆனால் மக்கள் நான்தான் குடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டேன் என்று நினைத்து என்னை மிகவும் கோவமாக விமர்சித்து பேசினர்.
என் காரால் விபத்தில் சிக்கியவரை பார்த்தேன் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்பதை உணர்ந்துக்கொண்டேன்.
ஆனால் மக்கள் ஏன் இவ்வளவு கோபமாக என்னை தவறாக நினைத்துக் கொண்டு பேசினார்கள் என்பது புரியவில்லை. மேலும் மொழி அவ்வளவாக தெரியாததால் எனக்கு அவர்களிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை என்றும், அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் புரியவில்லை என தெரிவித்துள்ள சுனித்தா, மக்கள் என்னை தவறாக நினைத்துக் கொண்டார்கள் என்பது மட்டும் புரிந்தது என கூறியுள்ளார்.
