சின்னத்திரை ரசிகர்கள் மனதை கவரும் விதத்தில், சீரியல் மற்றும் பல ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராகவோ அல்ல சீரியல் நடித்தாலே அவர்களுக்கு முன்னணி நட்சத்திரங்களாக ஆகும் அளவிற்கு தகுதி வந்து விடும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது.

காரணம், விஜய் டிவி பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளை வளர்த்துள்ளது. விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்க போவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கலக்கிய சிவகார்த்திகேயன் தற்போது, முன்னணி நடிகராக உள்ளார். 

மேலும் மா.கா.பா, பிரியா பவானி ஷங்கர், திவ்ய தர்ஷினி, ரோபோ ஷங்கர், ஜெகன், தீனா, ரம்யா உள்ளிட்ட பலர் இன்று  சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள்.

இப்படி பல்வேறு அம்சங்களை கொண்ட விஜய் டிவி, புதிய சேனல் ஒன்றை துவங்க உள்ளதாம். இந்த தொலைக்காட்சி பாடல்களை மட்டுமே ஒளிபரப்ப உள்ளதாகவும் விஜய் மியூசிக் என்ற பெயரில் துவங்க உள்ளதாக தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.