விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அணைத்து சீரியல்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், கேரள நடிகை மோனிஷா, மற்றும் சூர்யா தர்ஷன் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்து ஒளிபரப்பாகி வந்த சீரியல் 'அரண்மனை கிளி'.

ஆரம்பத்தில் இருந்தே, மனம் ஒற்று போகாத இருவர் திருமணம் செய்து கொண்டு, எப்படி வாழ்க்கையில் ஒன்று சேர்கிறார்கள், கால் முடியாத கணவரை நடக்க வைக்க நாயகியின் போராட்டம் பற்றிய அழகிய காதல் தொடராக இது ஒளிபரப்பானது. தற்போது இந்த தொடர் கொரோனா பிரச்சனை காரணமாக இன்னும் படப்பிடிப்புகள் துவங்காமல்  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் ஹைதராபாத், பெங்களூர் போன்ற இடங்களில் உள்ளதால் அவர்களை ஒன்று சேர்த்து சீரியலில் நடிக்க வைப்பது என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்று, சீரியல் தரப்பில் சில பேச்சுகளும் அடிபடுகிறது. எனினும் முழு ஊரடங்கு தற்போது அமலுக்கு கொண்டுவர பட்டுள்ளதால்  விரைவில் இந்த சீரியலின் படப்பிடிப்புகள் ஆரம்பம் ஆகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மலையாள சீரியலில் பிஸியாக நடித்து வந்த, மோனிஷாவிற்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படப்பிடிப்பை சேர்ந்த 22 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.