விஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் பிரபலத்திற்கு குழந்தை பிறந்தாச்சு..! கவிதையோடு வெளியிட்ட நடிகர்

'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம். சமீபத்தில் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை போட்டோ ஷூட் வெளியிட்டு தெரியப்படுத்திய நிலையில் தற்போது குழந்தை பிறந்த தகவலை கவிதையோடு தெரிவித்துள்ளார்.
 
vijay tv serial actor baby born news fans wishes

இவருக்கு சீரியல் நடிகர் என்கிற அறிமுகத்தை கொடுத்தது, 'வம்சம்' சீரியல் தான் என்றாலும்,  விஜய் டிவியில் வெளியான ஒளிபரப்பான "தமிழ் கடவுள் முருகன்" தொடரில், சிவன் மற்றும் வீரபத்திரன் கேரக்டர்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார். தொடர்ந்து சன் டிவியிலும், ரோஜா, சந்திரா குமாரி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

vijay tv serial actor baby born news fans wishes

தற்போது மிர்ச்சி செந்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும், 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருடைய திருமணம் கடந்த ஆண்டு கொரோனா நேரத்தில் நடந்ததால், மிகவும் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தாமல் எளிமையான முறையில் நடத்தினர். எனினும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

vijay tv serial actor baby born news fans wishes

இந்நிலையில் இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்டும் வைரலானது. இந்நிலையில் நேற்று இவரது மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கவிதை துவமாக புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துள்ளார்...  

இதுகுறித்து அவர் கூறுகையில், அகத்தை ஆட்கொண்ட அன்பே
தாயினுள் தோன்றிய தவமே
தந்தையின் தோளில் சுகமே
பெற்றோரின் பொக்கிஷம் நீ!
வாழ்வின் அர்த்தம் நீ!
காதலின் "சகா"ப்தம் நீ!
யாவும் நீ!யாதும் நீ! SAGA நீ!" என கூறியுள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios