'கல்யாண பரிசு', 'தேவதையை கண்டேன்', 'ஆபீஸ்' உள்ளிட்ட பல சீரியல்களில் கதாநாயகனாகவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் சீரியல் நடிகர் ஈஸ்வர்.

இவர் மீது கடந்த ஓரிரு வாரத்திற்கு முன், இவரின் மனைவி ஜெயஸ்ரீ அடையார் காவல் நிலையத்தில், இவருடன் 'தேவதையை கண்டேன்' சீரியலில் நடித்து வரும், சக நடிகை மஹாலக்ஷ்மியுடன் தகாத உறவில் இருந்து கொண்டு அடித்து துன்புறுத்தியதாக மெடிக்கல் ரிபோர்டுடன், மருத்துவமனையின் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஈஸ்வர் மற்றும் அவரின் அம்மா இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஒவ்வொரு ஊடகங்களாக சந்தித்து பேட்டி கொடுத்த ஜெயஸ்ரீ, ஈஸ்வர், நான் என்று நினைத்து மக்களிடம் கூட தவறாக நடந்து கொண்டார் என பகிரங்கமாக கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அதே போல் ஈஸ்வர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவரும் கட்டி அணைத்தபடி  இருக்கும் புகைப்படத்தையும், இருவரும் சேர்ந்து டிக் டாக் செய்த சில வீடியோக்களையும் ஆதாரமாக கொடுத்தார்.

பின்னர் ஜெயிலில் இருந்து பெயில் மூலம் வெளியே வந்த ஈஸ்வர், மஹாலக்ஷ்மியுடன் நட்பு ரீதியான பழக்கம் மட்டுமே உள்ளதாகவும், மற்றபடி தங்களுக்குள் தவறான எந்த உறவும் இல்லை என்றும், பணத்திற்காகவே ஜெயஸ்ரீ இப்படி செய்வதாக கூறி அதிரவைத்தார்.

பின், மஹாலக்ஷ்மி, அவருடைய கணவர் என ஆளுக்கொரு பக்கம் இந்த பிரச்னையை பேசினர். இந்த பிரச்சனையின் தீவிரம் தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், சக நடிகையுடன் விஜய் டிவி சீரியல் நடிகர் பழகி வருவதாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ஆகிய சீரியல்களில் நாயகனாக நடித்து வரும் நடிகர் அஸீமுக்கும், அவருடன் சேர்ந்து நடித்த நடிகைக்கும்  தான் காதல் கிசு கிசு முற்றி, தற்போது நடிகரின் வீட்டில் பஞ்சாயத்து துவங்கியுள்ளது. மேலும் இந்த பிரச்சனை அரசால் புரசலாக பற்றி எரிய, கேரியர் பாதித்து விட கூடாது என அந்த நடிகை சீரியலை விட்டே விலகினாலும், நடிகர் விடா பிடியாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் நன்றாக மனைவியுடன் வாழ்க்கை சென்று கொண்டிருப்பதாக பேசி வரும் அந்த நடிகர், மனைவியை விவாகரத்து செய்ய முயற்சி மேற்கொண்டு வருவதாக நண்பர்களிடம் கூறி கதறி வருகிறாராம் மனைவி.

இந்த பிரச்சனை எங்கு சென்று முடியப்போகிறது என தெரியவில்லை...