சீரியலில் ஒன்றாக இணைந்து நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது புதிது இல்லை. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி  வரும் தொலைக்காட்சி தொடர் 'ராஜா ராணி'.

இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாகவும் சஞ்சீவ் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்கள். இவர்களின் செம்பா - கார்த்தி, கதாப்பாத்திரத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் ஏற்கனவே, ஆலியா, சதீஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில் திடீர் என அவரை பிரேக் அப் செய்தார். இதை தொடர்ந்து சஞ்சீவ் மற்றும் ஆலியாவின் நெருக்கம் அதிகரித்தது. அடிக்கடி இருவரும் இணைந்து காதல் வசனம் பேசி டப்மேட்ச் வீடியோக்களை வெளியிடத்து மற்றும் இன்றி வெளிப்படையாகவே தாங்கள் காதலிப்பதாக கூறினர்.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் தம்பதிகள் போன்று அமர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து, 'ஆலியா மாற்று சஞ்சீவ்' இருவரும் திடீர் என ரகசிய திருமணம் செய்து கொண்டார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  உண்மையில் இது திருமணத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டதா என அவர்களே சொன்னால் தான் தெரியவரும்.

அந்த புகைப்படம் இதோ: