விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் அந்த சேனலின் டாப் சீரியலாக திகழ்ந்து வருகிறது. அண்ணன் - தம்பி சென்டிமெண்டை மட்டும் வைத்து குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த தொடரில் ஸ்டாலின், திகழ்ந்து குமரன், சித்ரா, சாந்தி வில்லியம்ஸ் என்று பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். இந்த சீரியலில் நடித்து வரும் ஜீவாவிற்கும் மீனாவிற்கும் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது போல் காண்பிக்கப்பட்டது. நிஜத்திலும் ஆண் குழந்தைக்கு அம்மாவான ஹேமா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தான் மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார்.  அந்த மீனா கேரக்டரில் வேற யாரையும் நடிக்கவைக்காதீங்க... ஹேமா மட்டும் தான் பொருத்தமாக இருக்கிறார் என ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் அளவிற்கு பாத்திரமாகவே மாறி நடித்து வருகிறார். 

 

இதையும் படிங்க: காதலரை கரம் பிடித்த விஜய் டி.வி. சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்...!

இந்நிலையில் மீனா - ஜீவா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா நடைபெற உள்ளது.அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் சீரியல் என்பதால் இன்றைய எபிசோட்டை 6 மணி முதல் 9 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு ஒளிபரப்ப விஜய் டி.வி,. முடிவெடுத்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக புரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். முதன் முறையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 3 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதால் ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.