விஜய் டிவி தொலைக்காட்சி பிரபலங்கள் பலருக்கு, இந்த வருடம் அடுத்தடுத்து திருமணம் நடைபெற்று வருகிறது. 'ராஜா ராணி' சீரியல் மூலம் காதலர்களாக மாறிய, ஆலியா - சஞ்சீவ் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், சரவணன் மீனாட்சி மைனாவிற்கும் ஒரு சில தினங்களுக்கு முன்பு, இரண்டாவது திருமணம் வெகு விமர்சியாக நடந்தது.

இவர்களை தொடர்ந்து, பகல் நிலவு சீரியலில் நடித்து, பின் காதல் ஜோடியாக கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் வலம் வந்த, அன்வர்-சமீரா இருவரும் திடீர் என திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த தகவலை, சமீரா புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். மேலும் இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிட்ட தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், திருமண பந்தத்தில் இணைத்துள்ள இவர்கள் இருவருக்கும், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.