தீண்டாமையை நிராகரிக்காதது கல்வியா? புதிய விளக்கம் தந்த நீயா? நானா? கோபிநாத்

வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு இது போன்ற தீண்டாமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது மிக வருத்தத்திற்குரிய விஷயம் என நெட்டிஷன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Vijay tv neeya naana new episode  gopinath speech about education goes viral

பிரபல விஜய் தொலைக்காட்சியில் அதிக ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் ஒன்றுதான் நீயா நானா. அந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இதன்  மூலம்  பல சமூக பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. வழக்கமான விவாத நிகழ்ச்சி போல் அல்லாமல் அதிக சுவாரஸ்யம் கொண்டு நம்பர் 1 ஆக திகழ்கிறது நீயா? naana?.  இரு தரப்பினரை அமர வைத்து இருவருக்கும் இடையே  கருத்து மோதலை ஏற்படுத்தி  இதில் சிறந்த பேச்சாளருக்கு பரிசையும் வழங்கி வருகிறார் கோபிநாத்.

அந்த வகைகள் இந்த வாரம் நடைபெற்ற நீயா நானா எபிசோடில் வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு இடையே கருத்து மோதல்களை உண்டாக்கும் விதத்தில் நிகழ்ச்சியை நகர்த்தி சென்றார் கோபிநாத். அப்போது வீட்டு வேலை செய்பவர்கள் தங்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்த உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தனர். அதோடு உரிமையாளர்களும் வீட்டு வேலை செய்பவர்களால் சங்கடத்துக்குள்ளாவது குறித்தும் பேசினர். ஆனால் உரிமையாளர்களின் கருத்து பார்ப்பவர்களை கடுப்பேற்றுவதாகவே இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...இரண்டாவது திருமணத்திற்கு தயாரான கோபி..ராதிகா போட்ட கிடுக்கு பிடி..பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Vijay tv neeya naana new episode  gopinath speech about education goes viral

அதில் வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு தனி டம்ளர் மற்றும் தட்டு தருவதாக படித்தவர்கள் கூறி இருப்பது மிகுந்த வருத்தத்திற்கு உள்ளான கருத்தாகவே இருந்தது. இது குறித்த கண்டனங்களை தெரிவித்த கோபிநாத் கல்வி என்பது தீண்டாமையை ஒதுக்குவது என்கிற கருத்தை ஆணித்தனமாக தெரிவித்தார். தன்னுடைய செயல், பேச்சு மற்றொருவரை புண்படுத்துமோ என்கிற புரிதல் இருப்பதே கல்வி என புதிய விளக்கத்தையம்  கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளதுடன் சமூக வலைதளத்திலும் இது குறித்தான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...யோகி பாபுவின் "ஷூ "...பாக்யராஜ் கலந்து கொண்ட பட ட்ரைலர் வெளியீட்டு விழா

மேலும் செய்திகளுக்கு...ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன வரலட்சுமி ...இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் கவரும் நாயகி

சமூகத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும் பொருளாதாரம் காரணமாக வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு இது போன்ற தீண்டாமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது மிக வருத்தத்திற்குரிய விஷயம் என நெட்டிஷன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios