விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் மௌன ராகம். மாதம் தொடர் பெங்காலி சீரியலை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்ட தொடர். இந்த தொடரில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த தொடரில் தாய் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்து உள்ளார்.

கடந்த 3 வருடத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சக்தி என்ற 7 வயது சிறுமியை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்தது. தற்போது இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்துடன் மெளனராகம் சீரியல் நிறைவடைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விஜய் டி.வி.நிர்வாகம் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் மெளன ராகம் சீரியலின் கிளைமேக்ஸ் வாரம் இதுதான் என்றும், விரைவில் மெளன ராகம் பார்ட் 2 வீடியோ ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

தற்போது மற்றொரு புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இளம் வயது சக்தியாக யார் நடிக்கப்போகிறார்கள் என்ற டுவிஸ்டை இப்போதே வெளியிட்டுள்ளனர்.இரண்டாம் பாகத்தில் 7 வயது சிறுமி சக்தி இளம் பெண்ணாக மாறி இருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் ஜில்லா, ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா தாஹா தோன்ற உள்ளார். வெள்ளித்திரையில் வெயிட்டான கேரக்டரை எதிர்பாத்து கலக்கல் போட்டோ ஷூட்டை நடத்தி வந்த ரவீனாவிற்கு, சின்னத்திரையில் பேமஸ் சீரியலில் முக்கிய வேடம் கிடைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த வீடியோ...