vijay tv famous person death in accident
உலகெங்கும் உள்ள பல திறமையாளர்களுக்கு, வாய்ப்புக் கொடுத்து முன்னேற்றும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகிய சிவா கார்த்திகேயன், ரோபோ சங்கர், மாகபா ஆனந்த், உள்ளிட்ட பலர் இன்று வெள்ளித்திரையில் வெற்றிநடைப்போட்டு வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் இந்த தொலைக்காட்சி நடத்திய "கிங்ஸ் ஆப் டான்ஸ்" நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் 21 வயதாகும் ஹரி. 
'கிங்ஸ் ஆப் டான்ஸ்" நிகழ்ச்சியின், முதல் சீசனின் பங்கேற்ற இவர், ஃபைனல் வரை வந்து பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றவர்.
தற்போது சில படங்களில் பின்னணியில் நடனம் ஆடிவருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹரி, நேற்று சென்னையில் உள்ள கதீட்ரல் சாலை அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார். 
இந்த தகவலை தொகுப்பாளினி பிரியங்கா, தன்னுடைய முகநூல் பக்கத்தில் மிகவும் வேதனையும் தெரிவித்துள்ளார். மேலும் இவருடைய மரணம் விஜய் டிவி குழுவினரை மட்டும் இன்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
I am still not able to believe this.
Feeling terrible. #Hari#gonetoosoon Rest in peace boy https://t.co/UvEuAYu3do
