விஜய் டிவி, தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு, நிகழ்ச்சியின் மூலம் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி, தற்போது தொகுப்பாளி, காமெடி நடிகை என, அவதாரம் எடுத்து பலரையும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர் அறந்தாங்கி நிஷா. 

கர்ப்பமாக இருந்த போதிலும், பல நாள் கடின உழைப்பால் கிடைத்த இடத்தை விட்டு விட கூடாது என எண்ணி, காமெடி நிகழ்ச்சியிலும், தான் தொகுத்து வழங்கி வரும் கூக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலக்கி வந்தார்.

சமீபத்தில் இவருக்கு வளைய காப்பு நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த விஷயத்தை அறந்தாங்கி நிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "எல்லாருக்கும் வணக்கம், எனக்கு பெண் குழந்தை பொறந்துருச்சு...... பாப்பாவின் பெயர் சஃபா ரியாஸ் என்று வச்சிருக்கோம். எல்லாரோட பிளெஸ்ஸிங் கண்டிப்பா அவளுக்கு வேண்டும். என தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது நிஷாவிற்க்கு அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

View post on Instagram