விஜய் டிவி தொலைக்காட்சியில் ஸ்டைலிஷ் இங்கிலீஷ் பேசும் தொகுப்பாளராகவும், குணச்சித்திர நடிகையாகவும் அனைவராலும் அறியப்பட்டவர் வி.ஜே ரம்யா. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓகே கண்மணி', 'கேம் ஓவர்', 'வனமகன்', 'ஆடை ' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் தளபதி விஜய்யை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள, 'மாஸ்டர்' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் வெளியாக இருந்த இந்த திரைப்படம், 144 தடை காரணமாக மற்றொரு ரிலீஸ் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட இந்த படத்தை எந்த அளவிற்கு தான் 'மாஸ்டர்' படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியிந்தார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கில் வீட்டில் உள்ள பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என, சில ஹெல்த் டிப்ஸ் மற்றும் சிம்பிள் உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்து காட்டி பெண்கள் ஆரோக்கியமாக இருப்பது எந்த அளவிற்கு முக்கியம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ரம்யா, திடீர் என சமூக வலைத்தளத்தை விட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "இந்த ஊரடங்கின் கடைசி வாரத்தை மெதுவாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும் மனமும் பாராட்டை விரும்புகின்றன. இருக்கும் அனைத்துக்காகவும் நன்றி செலுத்தி ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழுங்கள். கவலை வேண்டாம். நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். ஒரு குட்டி இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன் என் அன்பு மக்களே. அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்". என கூறி சென்றுள்ளார். இவருக்கு என்ன ஆனது, ஏன் இந்த திடீர் முடிவு என இவருடைய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.