விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை வெற்றி அடைந்தன. ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித் த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.  15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது. 

இதையும் படிங்க: “கமலுக்கும், எனக்கும் என்ன உறவு”... முதன் முறையாக மனம் திறந்த பூஜா குமார்...!

பிரபல தொலைக்காட்சிகள் நடத்தும் விருது நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக களம் இறங்கி கலக்குகிறார். தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் நடிக்க வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வெயிட்டிங்.

இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம்  டிடி ஆடையின் அளவை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டே செல்கிறார். பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார். கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், டிடி-யில் வெளியில் எங்கும் ஷூட்டிங் செல்லாமல் உள்ளார். சமீபத்தில் தனது இடது காலில் மாவு கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை டிடி தனது இன்ஸ்டாகிராமில் பகிர ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தனது இஸ்லாமிய நண்பர்களுக்காக வலியை எல்லாம் தாங்கி கொண்டு டிடி செய்துள்ள அசத்தலான காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

உலகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. எனவே தனது இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்து கூறும் விதமாக சிவப்பு நிற சல்வாரில், தலையை துப்பட்டாவால் போர்த்திய படி முழுக்க, முழுக்க முஸ்லிம் பெண் போலவே காட்சியளிக்கும் டிடி, வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். தனது இடது காலில் அடிபட்டுள்ளதால் எழுந்து நிற்க முடியாத டிடி, தரையில் அமர்ந்த படியே தனது குட்டி, குட்டி மூமெண்ட்ஸ் மற்றும் க்யூட் சிரிப்பு மூலம் அசத்தலாக கையை மட்டும் வைத்து நடனமாடியுள்ளார். டிடி-யில் இந்த அசத்தல் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.