Asianet News TamilAsianet News Tamil

இது.. அதுல்ல.. சிக்கிய போட்டோஸ்.. புயலை கிளப்பும் த்ரிஷா விவகாரம்.. அப்ப விஜய்யின் அரசியல் வாழ்க்கை?

த்ரிஷா விவகாரத்தால் தற்போது விஜய்யின் அரசியல் வாழ்க்கை ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Vijay Trisha Affair Issue sparks again will it affect his political career Tamilaga Vetri Kazhagam Rya
Author
First Published Jun 24, 2024, 12:52 PM IST

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார் நடிகர் விஜய். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே தனக்கென லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய் படங்களை அவரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும் விஜய்யின் பெரும்பாலான படங்களில் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டி வருவதால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் விஜய் அழைக்கப்படுகிறார்.

சமீபத்தில் தான் விஜய் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார் விஜய். தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் என்றும் விஜய் கூறியுள்ளார். மேலும் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தை தவிர, ஏற்கனவே கமிட்டான ஒரு படத்தையும் முடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.

மற்ற நடிகர்களை போல் ஓய்வுக்கு பின் அரசியலுக்கு வராமல் உச்ச நட்சத்திரமாக இருக்குமே போதே அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட விஜய்க்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் தற்போது விஜய்யின் அரசியல் வாழ்க்கை ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. த்ரிஷா விவகாரம் தான் அதற்கு காரணம். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. 

நடிகர் விஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும், ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஜேசன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். சரி.. இப்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்ன தெரியுமா? விஜய் – த்ரிஷா காதல் விவகாரம் தான். இது ஒன்றும் புதிய தகவல் இல்லை. கில்லி, குருவி படத்தின் போது பரவிய கிசுகிசு தான். இப்போது இந்த கிசுகிசு பற்றி ஏன் பேசப்படுகிறது.. அதற்கு த்ரிஷா சொன்ன பிறந்த நாள் வாழ்த்துகள் தான் காரணம்.

விஜய்யின் பிறந்த் நாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு த்ரிஷா வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் “ நீ தான் என் காதல்.. சாகும் வரை நீ தான் என் காதல்” என்ற வார்த்தைகள் இடம்பெற்ற ஆங்கில பாடல் ஒன்றையும் பதிவிட்டார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)

 

இந்த நிலையில் த்ரிஷா மற்றும் விஜய் இருக்கும் பழைய படங்களை நெட்டிசன்கள் தோண்ட அதில் விஜய் தனியாக நடக்கும் போது ஒரு போட்டோவு, த்ரிஷா பக்கத்தில் ஒரு கால் இருக்கும் போட்டோவும் இணையத்தில் வைரலானது. விஜய் அணிந்திருந்த அதே ஷூ வை, த்ரிஷா அருகில் அமர்ந்திருக்கும் காலிலும் உள்ளது. இதனால் விஜய்யும் த்ரிஷாவும் அடிக்கடி வெளிநாடு சென்றுள்ளனர் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

Vijay Trisha Affair Issue sparks again will it affect his political career Tamilaga Vetri Kazhagam Rya

அதே போல் த்ரிஷா பயணம் செய்யும் லோகேஷன்களில் விஜயும் இருந்தது சில போட்டோக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் பலரும் விஜய்யை ட்ரோல் செய்து வருகின்றனர். எனவே இந்த விவகாரம் விஜய்யின் அரசியலுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

விஜய் – த்ரிஷா விவகாரம் சம்மந்தப்பட்ட இருவரின் பெர்சனல் விஷயம் என்றாலும், அவர் பொது வாழ்க்கைக்கு வரும் இந்த விவகாரத்தை ஒரு கேள்வியாக எழுப்பலாம். எனவே இந்த விவகாரம் விஜய்யின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும். இதற்கு முன்பு வரை தலைவர் அல்லது தலைவியின் திருமணம் உறவு முறை வாக்கு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், விஜய் தற்போது தான் அரசியல் பிரவேசத்தை தொடங்கி உள்ளார். எனவே இது பெரிய விவகாரமாக மாறும் முன்பு இதற்கு விளக்கம் கொடுப்பது நல்லது என்றும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios