இனிமேல் சிங்கிள் ஹீரோ படம் செல்ஃப் எடுக்காது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்திருக்கும் மணிரத்னம் மீண்டும் மூன்று ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை இயக்கவிருப்பதாகவும் அது அநேகமாக ’தளபதி’ படத்தின் பார்ட் 2 வாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் நடமாடுகின்றன.

ரஜினியின் ஆலோசனையின்படி ‘தளபதி’ பார்ட் 2 வைத்தான் முதலில் ‘பேட்ட’ படமாக இயக்க அனுமதி கேட்டிருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். ஆனால் சற்றும் யோசிக்காமல் அந்த வேண்டுகோளை ஒரே சந்திப்பில் நிராகரித்தார் மணிரத்னம். எனவே வேறு கதைக்கு ஷிஃப்ட் ஆன கார்த்திக் சுப்பாராஜ் தளபதி பட காட்சிகள் சிலவற்றை மட்டும் கொஞ்சம் உல்டா பண்ணி ‘பேட்ட’ படத்தில் வைத்திருப்பதாக இப்போதும் செய்திகள் உண்டு.

இந்நிலையில் ‘தளபதி’ பார்ட்2 வை இயக்க தானே களம் இறங்கியிருக்கும் மணிரத்னம் படத்தில் தனது பழைய கம்பெனி ஆர்டிஸ்டுகளான விக்ரம், சிம்புவை அடுத்து புதிதாக விஜய்யை உள்ளே இழுக்க முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக அவரது தந்தை எஸ்.ஏ.சியை சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் நடமாடுகின்றன.

பார்ட்2 வில் ரஜினி வேடத்தில் விஜய் நடிக்கக்கூடும். ஒருவேளை இப்படத்தில் நடிக்க விஜய் சம்மதித்தால், அட்லி படம் சில மாதங்கள் தள்ளிப்போகலாம்.