vijay talking about second marriage

இயக்குனர் விஜயும் நடிகை அமலாபால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு வருடத்திலேயே இவர்களது திருமண வாழ்க்கைக்கு குட் பை சொல்லிவிட்டு சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் பல ஊடகங்களில் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இந்த செய்தியை அமலாபால் கேட்டு இன்னும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் தனது மறு திருமண செய்தி குறித்து இயக்குனர் விஜய் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: 

சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது. 

இது போன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இது போன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற தார்மீக உரிமை எனக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். 

ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய கடமை. அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன்' என்று கூறியுள்ளார்.