இந்திய போர் விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இவரை பாகிஸ்தான் ராணுவம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பலர் கடவுளுக்கு பிராத்தனை செய்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர்களுடைய பிராத்தனை மற்றும் இந்திய பற்று கொண்டவர்கள் நம்பிக்கையும் அபிநந்தனை பத்திரமாக மீண்டும் இந்தியா அழைத்து வந்து அவருடைய குடும்பத்திடம் சேர்த்து.

இதனை தொடர்ந்து தற்போது, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தமிழ் செல்வன் என்பவருடன், நடிகர் விஜய் போன் மூலம் நலம் விசாரித்த ஆடியோ ஒன்று, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த ஆடியோவில் விஜய், தமிழ் செல்வனுக்கு போன் செய்து, ஜம்முவிற்கு சென்று விட்டர்கள் என கேள்விப்பட்டேன் என கூற, அதற்கு அந்த ராணுவ வீரரும் 'இப்போது காஷ்மீர் மேலே செல்ல தயாராகி கொண்டிருப்பதாக கூறுகிறார்'. 

பின் பத்திரமாக செல்லுங்கள், எல்லாம் நல்லது தான் நடக்கும் என்று விஜய் கூறுகிறார். ஆனால் விஜய் எப்போது பேசிய ஆடியோ இது என தெரியவில்லை. இப்போது வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் வீடியோவாக மாறியுள்ளது.

Scroll to load tweet…