தல அஜித் தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் கசிந்து இருந்தன.

ஆனால் தற்போது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் ஸ்ட்ரைக் முடிந்த பின்னரே படப்பிடிப்புகள் தொடங்குமாம். இதனால் தீபாவளிக்கும் படப்பிடிப்புகளை முடித்து ரிலீஸ் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என கூறப்படுகிறது.

எனவே, விஸ்வாசம் படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி கொள்வதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன. இந்த தகவல்கள் தல ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திட்டமிட்டபடி “தளபதி62” மற்றும் “NGK” படங்கள் ரிலீஸ் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த ஸ்கெட்ச் படத்தை அடுத்து தற்போது ஹரி இயக்கத்தில் சாமி-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அந்த விமான பணி பெண்கள் விக்ரம் வருவதை அறிந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் அவருக்காக கேக், சாக்லேட், ஜூஸ் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். மேலும் இந்த விமானத்தில் பயணிக்கும் திறமையான நடிகர் விக்ரம் அவர்களுக்கு நன்றி எனவும் ஒரு அட்டையில் குறிப்பிட்டு உள்ளனர்.

விஜய் மீது கோபமான சத்யராஜ்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் இன்று மெகா ஹிட் நடிகரின் ஒருவராக விளங்கி வருகிறார். இவருடைய நண்பன் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தியிருப்பார் சத்யராஜ். ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த சத்யராஜ் விஜய்க்கு வில்லனாக நடித்து திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தார்.

சத்யராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது நான் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி இருந்தேன். அந்த வீட்டில் என் மகனின் ரூமை பார்த்த எனக்கு விஜய் மீது பயங்கர கோபம் வந்தது என ஜாலியாக கூறியிருந்தார். ஏனென்றால் சிபி தன்னுடைய ரூம் முழுவதும் விஜயின் புகைப்படங்களை ஒட்டி வைத்து வைத்திருந்தார். இதனையடுத்து விஜய் தன்னுடைய ரசிகர்களை பயனுள்ள வகையில் வழி நடத்த வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார்.

தெய்வமகள் சத்யாவுக்கு பாலியல் தொல்லை!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் சத்யா. இவருடைய உண்மையான பெயர் வாணி போஜன்.இவர் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் கோபம் கொந்தளிக்க பேசினார். அதில், தனக்கு நடந்த பாலியல் தொல்லையை பற்றி ஓபனாக பேசியுள்ளார். நான் 4-ம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன்.

அப்போது அவரின் அப்பா உன் தோழி உள்ளே இருக்கிறார் என கூறினார். நான் உள்ளே சென்றதும் கதவை மூடி விட்டு என்னை தொந்தரவு செய்தார், சிறிய வயது என்பதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஹாசினிக்கு நடந்த சம்பவம் போல எனக்கும் நடந்து இருந்தால்? என உருக்கமாக கூறியுள்ளார்.