நடிகர் விஜய் சேதுபதி, சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்து வெளியாகியுள்ள 'பேட்ட' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவோடு வசூல் சாதனை செய்து வருகிறது.

இந்நிலையில், இவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.  பொதுவாக முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்த பின் நடிக்க தயங்கும் வேடங்களில் துணிந்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. 

இந்நிலையில் தற்போது,  தோல்வி படத்தை கொடுத்ததால், துவண்டிருந்த இயக்குனருக்கு, வாய்ப்பு கொடுத்து தேற்றியுள்ளார் விஜய் சேதுபதி.

அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பொன்ராம் தான். சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனரான இவர் பல வெற்றி படங்களை கொடுத்த போதிலும், கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான 'சீமராஜ' திரைப்படம் படு தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் துவண்டிருந்த பொன்ராமுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.