நடிகர் விஜய் சேதுபதி, தளபதி விஜயின் மகன் சஞ்சய்யின் முதல் படத்தை தயாரிக்க உள்ளததாக வெளியான தகவல் விஜய் ரசிகர்களை உட்சாகம் அடைய செய்துள்ளது.

கன்னடாவில், திரைத்திறை சம்மந்தமான படிப்பை படித்து  வரும் தளபதி விஜய்யின் மகன், இந்தியா வந்ததும், தன்னுடைய தந்தை போலவே திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், விஜய் சேதுபதி தான் வில்லனாக தெலுங்கில் நடித்து வரும், 'உப்பெனா’ என்கிற படத்தின் கதையை, 'மாஸ்ட்டர்' படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் கூற, இந்த கதை தன்னுடைய மகனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என விஜய் கூறியதாகவும், இதை கேட்ட விஜய் சேதுபதி உங்கள் மகன் இந்த படத்தில் நடிக்கிறார் என்றால் இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என கூறியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்,  இது உண்மையிலேயே நடந்த சம்பவமா?  அல்லது வழக்கம் போல் யாராவது கொளுத்தி போட்ட கட்டு கட்டையா? என்பது விரைவில் தான் தெரியவரும்.  

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் உப்பெனா’ படத்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன் வ்வைஷ்ணவ் தேஜ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக நடந்த வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்ப்டுட்டுள்ளது.

உண்மையிலேயே தளபதியின் மகன் விஜய் சேதுபதி தயாரிப்பில் நடிக்கறினாரா? விஜய் சொன்னது உண்மையா  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.