கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  பேட்ட திரைப்படத்தை தமிழ்நாட்டில் எடுக்க முடியாது என்றும்,  அன்பு தொல்லை. காரணமாக  வெளி மாநிலத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கூறினார்.

சரி இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை யார் பண்ணுவார் என்று இயக்குநர் கார்த்திக்கிடம் கேட்டேன். அதற்கு அவர் விஜய் சேதுபதி பண்ணுவார் என்று கூறினார். எனக்கு சந்தேகம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கார்த்திக் சொன்னார். பின்னர் விஜய் சேதுபதி ஒத்துக்கிட்டதாக சொன்னார்.

விஜய் சேதுபதியோட படம் பார்த்திருக்கிறேன். அவர் நல்ல நடிகர். அவர் சாதாரண நடிகன் இல்லை. மகா நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் என்ன செய்யனும், எப்படி செய்தால் நல்லா இருக்கும், அப்படி செய்யலாமா, இப்படி செய்யலாமா என்று கேள்வி மேல கேள்வி கேட்டு புதுசா யோசிச்சு செய்வார். நல்ல மனிதர், பொறுமையான மனிதர். பேச்சு, சிந்தனை, கற்பனை வித்தியாசமானது. அவர் ஒரு மனநல மருத்துவர் மாதிரி. ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது என ரஜினிகாந்த் பாராட்டிப் பேசினார்..