அவரது நடிப்பில், 'சங்கத்தமிழன்' படம் வரும் நவம்பர் 15ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, 'லாபம்', 'க/பெ ரணசிங்கம்', 'கடைசி விவசாயி', 'மாமனிதன்' என அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. 

அதுதவிர, வில்லனாக நடிக்கும் விஜய்யின் 'தளபதி-64' படம், தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கும் படம் என சுமார் அரை டஜன் படங்களில் பிஸியாக நடித்துவரும் விஜய் சேதுபதி, அடுத்து புதுமுக இயக்குநர் வெங்கடகிருஷ்ணா ரோஹந்த் இயக்கும் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார். 

சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இந்தப்படம், விஜய்சேதுபதியின் 33-வது படமாகும். இதில், அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். 

இந்தப் படத்திற்கான டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என படத்திற்கு கேட்சிங்கான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த டைட்டில்தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடலின் வரியையையே விஜய்சேதுபதியின் படத்திற்கு தலைப்பாக்கியிருப்பது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

 "எல்லா ஊரும் எம் ஊர்... எல்லா மக்களும் எம்உறவினரே " என்ற அர்த்தத்தை உணர்த்தும் இந்த வரியை அடிப்படையாகக் கொண்டே இந்தப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, "யாதும் ஊரே யாவரும் கேளிர்"  படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.