நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவே நிமிர்த்து பார்க்கும் அளவிற்கு தற்போது வளர்ந்துள்ளார். மேலும் தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கும், நாடகத்துறையை சேர்ந்தவர்களுக்கும்  வெளியில் கூறாமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் மாணவி அனிதா பற்றி  பேசிய அவர் ’இந்த நிகழ்விற்காக நாம்  வெட்கப்பட வேண்டும், இப்படி நினைத்த படிப்பு படிக்க அதற்கான தகுதி இருந்தும் புறக்கணித்ததால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு  எல்லோருமே அசிங்கம் தான் பட வேண்டும் .

இந்த மாணவியின் இழப்பு மனதிற்கு மிகவும் வலியாக உள்ளது, இந்த நிலைமை உடனே மாற வேண்டும்’ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.