Vijay Sethupathi Worker Simbu Engineer Trend is Manirathnams First Look Poster
ஃபகத் ஃபாசில் விலகல்
மணிரத்னம் தற்போது முன்னணி நடிகர்களை கொண்டு படம் இயக்கி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.இதில் விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா ,அரவிந்த் சாமி ,ஃபகத் ஃபாசில் ,ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பதாக இருந்தது.ஆனால் சில நாட்களுக்கு முன் வேலைக்காரன் புகழ் ஃபகத் ஃபாசில் படத்திலிருந்து விலகினார்.
உடற்பயிற்சி
மேலும் முதலில் சிம்பு சம்பந்தமான காட்சிகள் முதலில் படமாக்க பட உள்ளது. AAA படத்திற்காக உடை எடையை கூட்டிய சிம்பு தற்போது இந்த படத்திற்காக முழு மூச்சில் உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
போலீஸ் வேடம் இல்லையாம்
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு போலீஸ் வேடம் என்று முதலில் செய்திகள் வெளியாயின. ஆனால் தற்போது படத்தில் நடிப்பவர்களுக்கு என்ன என்ன கதாபாத்திரம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


கதைக்களம்
இப்படம் கூடங்குளம் அணுமின் நிலையம் ,மீத்தேன் எரிவாயு திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வில்லன் அருண் விஜய்
மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்திலிருந்து ஒருவர் போய், இன்னொருவர் இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல .நம் அருண் விஜய்தான். மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு வில்லன் வேடமாம். பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த அருண்விஜய்க்கு ரிஎன்ட்ரி கொடுத்த படம் என்றால் அது என்னை அறிந்தால் படம் தான். அதில் வில்லனாக மிரட்டியிருப்பார் அருண் விஜய். அதன் பிறகு மெடிக்கல் கிரைம் பற்றி சொல்ல கூடிய படமான குற்றம் 23 படத்தில் அருமையாக நடித்திருப்பார் அருண் விஜய். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தலைப்பு
தற்போது சிம்பு விஜய் சேதுபதி கூட்டணியில் அருண்விஜயும் இணைந்திருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. மேலும் தற்போது படத்திற்கான தலைப்பும் வைக்கப்பட்டு விட்டது.
செக்கச் சிவந்த வானம்
இப்படத்திற்கான டைட்டில் 'செக்கச் சிவந்த வானம்' என்று டைட்டில் போஸ்டரை தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
