Vijay Sethupathi who plays the police officer again Mani Ratnam film ...

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படமாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், உட்பட பலர் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தில் நடிகைகள் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இயைமைக்கிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. அதில் நட்சத்திரக் கூட்டங்களின் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொருவருடைய படங்கள் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முன்னனி கதாநாயகர்கள் இரண்டு கதநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து படத்தில் வேலை செய்யப் போகிறார்களாம்.

இதில், விஜய் சேதுபதி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு இணையாக ஜோதிகா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பகத் பாசில் உள்ளிட்ட மற்ற அனைவரும் கேங்க்ஸ்டர்களாக நடிக்கிறார்களாம்.

இப்படத்துக்காக விஜய் சேதுபதி உடல் எடையைக் குறைக்க இருக்கிறார் என்பதும் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்பதும் கூடுதல் தகவல்.