Vijay Sethupathi who plays a stylish don Emmy Jackson is jodi

“ஜுங்கா” படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் நடிக்கவுள்ளார்.

“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தை அடுத்து அடுத்ததாக கோகுல் இயக்கவுள்ள படம் ‘ஜுங்கா’.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் டானாக நடிக்கிறார். ஆனால், லோக்கல் ரவுடி இல்லை. வெளிநாட்டில் வாழும் ஸ்டைலிஷ் டான்.

இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தொடங்க இருக்கிறது.

இந்தப் படத்துக்கு சித்தார்த்விபி இசையமைக்கிறார் என்பது கொசுறு தகவல்.