நடிகர் விஜய் சேதுபதி,  கதாநாயகனாக தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும்,  ஒரே மாதிரியான கதைகளையும், கதாபாத்திரங்களையும் விரும்பாத இவர், தனக்கு ஏற்றாப்போல் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், மலையாளத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். அதை தொடர்ந்து தெலுங்கில், நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து, சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் ஹீரோவாக நடிக்கும், ஒரு படத்தில் இவர் வயதான தோற்றத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். மேலும் தன்னுடைய மகளை காதலிக்கும் ஹீரோவை மிரட்டும் வில்லனாக இந்த படத்தில் இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.