நெருங்கிய நண்பர்களே மோதிக்கொள்ளும் விநோத தீபாவளியாக இருக்கப்போகிறது இந்த ஆண்டின் சினிமா தீபாவளி.யெஸ்...’தளபதி64’ல் இணைந்து பணியாற்றும் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் சேதுபதி ஆகிய மூவரின் படங்களும் இந்த தீபாவளி ரேஸில் ஒன்றாக மோதுகின்றன.

இந்த ஆண்டின் தீபாவளி அக்டோபர் 27ம் தேதியன்று ஞாயிறன்று வருகிறது என்பதால் சினிமா நடைமுறைப்படி ஓரிரு தினங்கள் முன்கூட்டியே படங்களை ரிலீஸ் செய்வார்கள். அதன்படி தீபாவளி ரிலீஸை முதலில் உறுதி செய்த ‘பிகில்’படத்தயாரிப்பாளர் குறிப்பிட்ட தேதியை மட்டும் உறுதி செய்யவில்லை. அதற்கு அடுத்த அறிவிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’படமும் தீபாவளி ரிலீஸாக அறிவிக்கப்பட்டது. 

விஜய் படத்தை அடுத்து இயக்கும் லோகேஷ் கனகராஜின் படமே தீபாவளிக்கு மோதுவது கோடம்பாக்க வட்டாரத்தை ஆச்சரியப்படுத்தியிருந்த நிலையில், தற்போது தளபதி64’ல் நடிக்கும் விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’படமும் திடீரென தீபாவளி ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்ட படத் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடக்‌ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,...லிப்ரா புரடக்‌ஷன்ஸ் மூலமாக எங்கள் ‘சங்கத் தமிழன்’படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதில் பெருமை அடைகிறோம் என்று அறிவித்துள்ளனர்.

அடுத்து ஒரே படத்தில் பணியாற்றும் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரும் ஒரே தேதியில் மோதுவது இந்த தீபாவளியை த்ரில் தீபாவளியாக்கியுள்ளது.