சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, எல்லோரும் கனவு காணவேண்டும். ஆனால் நான் காணாத ஒரு கனவு நடந்தது. ரஜினியுடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவருடன் நடித்ததே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போ வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ரஜினிகாந்த்தின் வேலையை பார்த்து கடவுளே கைதட்டுவார்.

கார்த்திக் சுப்புராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் காலத்தில் இருந்து தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு. அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். பேட்டைலயும் அதேபோன்ற காட்சிகள் நிறையவே இருக்கு. கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பாரு. பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கும். செம கெத்தா, செம க்யூட்டா, செமயா பேட்ட வந்துருக்கு. எப்பவும் பெரிய ஆள எதிர்த்தாதான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான் என்றார்.

மேடையேறிய ஒவ்வொரு நடிகரும்  ரஜினியின் டயலாக்  பேசி நடிச்சு காட்டுங்கனு தொகுப்பாளர்கள் சொல்ல பாபி, சசிக்குமார் என ஒவ்வொருத்தரும் ரஜினி டையலாக்க நடிச்சி காட்டிட்டு, ரஜினி சார் அளவுக்குலாம் நடிக்க முடியாது ,அவர் கடவுள், சாரி சார்னு சொல்லிட்டு மேடையை காலி செய்தனர்.

அடுத்ததா வந்த விஜய் சேதுபதியிடம்  ரஜினி மாதிரி நடக்க சொல்லி வற்புறுத்தினர்.  எனக்கு மத்த யார் மாதிரியும் நடிக்க தெரியாது , என்ன மாதிரி மட்டும்தான் நடிக்க வரும்னு  சொல்லிட்டாரு. இதை எதிர்பார்க்காத  தொகுப்பாளர்கள் கெஞ்சிக் கேட்டும்,விஜய் சேதுபதி எனக்கு ரஜினிசார் மாதிரி மெமிக்ரி கூட பண்ண தெரியாது எனக்குனு  சொல்லிட்டு மேடையைவிட்டு இறங்கினார் விஜய் சேதுபதி.