விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கி வரும் 'சிந்துபாத்' படத்தின் செக்ண்ட்லுக் மற்றும் டீசர் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படவிருப்பதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'சிந்துபாத்' படத்தின் டீசர் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் விஜய்சேதுபதி, அஞ்சலியின் அட்டகாசமான புதிய போஸ்டரும் செகண்ட்லுக்காக வெளிவந்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது

யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வாசன் மூவீஸ் மற்றும் கே புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகிறது.