தமிழ் சினிமாவில், முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தான் நடிக்கும் படங்களுக்கு கோடி கணக்கில் சம்பளம் பெரும் நடிகர்களின் பட்டியலில் இருக்கும் இவர், கடந்த காலங்களில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது
தமிழ் சினிமாவில், முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தான் நடிக்கும் படங்களுக்கு கோடி கணக்கில் சம்பளம் பெரும் நடிகர்களின் பட்டியலில் இருக்கும் இவர், கடந்த காலங்களில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில், வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், அவருடைய அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

ஒரு சில ஆவணங்களையும் பெற்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது அவருடைய வீட்டின் அருகில் உள்ளவர்கள் அவர் வெளியூர் சென்று இருப்பதால் வீட்டில் யாரும் இல்லை என்று கூறியுள்ளனர். அதனடிப்படையில் வருமானவரிதுறை அதிகாரிகள் திரும்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுயுள்ளது.... நடிகர் விஜய் சேதுபதி, வருமானவரி ஈப்பு செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவருடைய அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினோம். அதில் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து உள்ளோம். அவர் வெளியூர் சென்று இருப்பதால் அவருடைய வீட்டை சோதனை செய்ய முடியவில்லை, விஜய் சேதுபதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் சென்னைக்கு வந்ததும் முறையாக விசாரணை நடத்தப்படும் என கூறினார்.

இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி, சென்னைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் ஐடி அதிகாரிகள் விஜய் சேதுபதி வீட்டிற்கு செல்லலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகினர் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
